மாட்டு வியாபாரியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணக்குடி தெற்கு தெருவில் மாட்டு வியாபாரியான செந்தில் என்பவர் வசித்துவருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் தேவேந்திரன் என்பவருக்கு சொந்தமான பசு மாட்டை செந்தில் 17 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி வாங்கியுள்ளார். அப்போது முன்பணமாக 1,700 ரூபாய் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மீதமுள்ள 15 ஆயிரத்து 300 ரூபாயை செந்தில் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மீதமுள்ள பணத்தை தேவேந்திரன் கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது தேவேந்திரன் மற்றும் அவரது உறவினரான சரவணன் ஆகிய இருவரும் சேர்ந்து செந்திலை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த செந்தில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.