எள் செடிகளை சாலையில் காய வைத்து விபத்துக்கு காரணமான விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சுவெளி அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்நிலையில் சாலையில் அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை குவியலாகக் குவித்து வைத்திருந்தது தான் விபத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
கடந்த மாதம் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா போக்குவரத்திற்கு இடையூறாக தானியங்களை சாலையில் காய வைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் எள் செடிகளை சாலையில் காய வைத்த விவசாயியான நெடுஞ்செழியன் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று காலை நெடுஞ்செழியன் காவல்துறையினர் கைது செய்தனர்.