வேலை பார்த்துக்கொண்டிருந்த போது பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் அழகப்பன் என்பவரது கடலை வயலில் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வயல் வெளியில் இருக்கும் கல்லுக்கு அடியில் இருந்து வந்த பாம்பு சிந்தாமணியை கடித்தது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ராயர் தனது மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிந்தாமணி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.