Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நாய்கள் கடித்து 8 ஆடு பலி”…. பொதுமக்கள் கோரிக்கை…!!!

நாய் கடித்ததில் 8 ஆடுகள் இறந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை தாலுகாவைச் சேர்ந்த மீனவேலி ஊராட்சியில் இருக்கும் அன்னதானபட்டியை சேர்ந்தவர் ஆண்டி மகன் அழகர்சாமி. இவர் கூலித் தொழிலாளியாக இருக்கின்றார். இவர் சொந்தமாக 25 செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் செம்மறி ஆடுகளை வைத்து விட்டு வழக்கம்போல் வீட்டின் பின்புறம் கட்டிப் போட்டுள்ளார்.

அதிகாலையில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது இரண்டு நாய்கள் கடித்ததில் 11 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருக்கின்றது. மேலும் 8 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது. உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவர் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு முதல் உதவி செய்தார். இதுபோலவே சித்திரம்பட்டி, அகரப்பட்டி பகுதிகளிலும் ஒரு சில ஆடுகளை இந்த நாய்கள் கடித்து இருப்பதாக மக்கள் கூறினார்கள். விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Categories

Tech |