தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் ஆங்காங்கே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை தடுக்க “ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0” நடந்து வருகிறது. இதன் வாயிலாக 15 நாட்களில் 1,778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையிலும் 2,400 கிலோ கஞ்சா மற்றும் 135 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.