தமிழகத்தில் ரேஷன் அட்டை ஒரு அத்தியாவசிய ஆவணமாக மாறி விட்டது. அத்துடன் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களை வைத்துதான் ஏழை,எளிய மக்கள் தங்களின் குடும்பங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசும் பல்வேறு நன்மைகளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா பரவலின்போது ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு ரூபாய் 2000 பணம் வழங்கப்பட்டது. இதையடுத்து பொங்கல் பரிசும் வழங்கப்பட்டது. அதன்பின் குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 வழங்க உள்ளதாக தமிழ்நாடு அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ரேஷன் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் ரேஷன் பொருட்களை ஒவ்வொரு மாதமும் வாங்க வேண்டும் என அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருசிலர் அந்த பொருட்களை வாங்காமல் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு இவ்வாறு தொடர்ந்து 6 மாதம் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருப்பவர்களுக்கு அவர்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்து வருகிறது. அவ்வாறு தங்களின் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு இருந்தால் அதை மீண்டும் ஆக்ட்டிவ் செய்ய வைப்பது தொடர்பாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இப்போது உங்களின் ரேஷன்கார்டு ரத்து செய்யப்பட்டு இருந்தால் அதனை மீண்டும் ஆக்டிவேட் செய்ய முதலாவதாக மாநில அல்லது மத்திய அரசின் AePDS போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். அதன்பின் கீழே குறிப்பிடப்படும் படிகளை கடைபிடித்து ரேஷன் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய கோரிக்கை விடுவிக்க வேண்டும். அதனை அந்த அதிகாரிகள் ஏற்றுக் கொண்டால் ரத்துசெய்யப்பட்ட ரேஷன் கார்டு மீண்டுமாக ஆக்டிவேட் செய்யப்படும். இல்லையெனில் https://www.tnpds.gov.in/ போர்ட்டலில் உள்ள ‘Ration Card Correction’ என்பதனை கிளிக்செய்ய வேண்டும். பின் ரேஷன் கார்டு திருத்தம்பக்கத்தில் படிவத்தை நிரப்பவும். அடுத்ததாக உங்களது ரேஷன்கார்டில் ஏதாவது பிழைகள் இருந்தால் அதை சரிசெய்து கொள்ளலாம்.