Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மழைக்கு ஒதுங்கி நின்ற ஆடுகள்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெட்டுர் கிராமத்தில் கருப்பண்ணன்-மாது தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை மாது வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது லேசான மழை பெய்ததால் அப்பகுதியில் இருக்கும் கல்லூரி அருகே இருந்த மின்சார பெட்டி பக்கமாக ஆடுகள் சென்றன. அப்போது திடீரென மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |