Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்க மகன் வேகமா போறான்” பெண்ணை மிரட்டிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி மலைப்பகுதியில் கூலி தொழிலாளியான சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனை சரஸ்வதி கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் ராஜேஷ் மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக செல்வதை நிறுத்தவில்லை. இதுகுறித்து சரஸ்வதி ராஜேஷின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ராஜேஷ் குடிபோதையில் சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ராஜேஷ் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சரஸ்வதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |