Categories
மாநில செய்திகள்

அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா…. அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மரியாதை….!!!!

சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள் அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை அடையாறில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் .

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் இறையன்பு ,சென்னை மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின் முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்கிடையில் அம்பேத்கர் பிறந்தநாளான இன்று சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |