கொரிய தீபகற்பத்தில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா கடற்கரைகள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு இணங்கு மறுத்து தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இதற்கிடையில் வடகொரியா கடந்த மாதம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் பிளாஸ்டிக் ஏவுகணையை சோதனையை நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கடற்படைகள் இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் நேற்று கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சிக்கு அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க் கப்பலான யு எஸ் எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் தலைமை தாங்கி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் கொரிய தீபகற்பத்தில் பயிற்சியில் ஈடுபட்டது முதல் மூறையாகும்.
இதற்கிடையில் சர்வதேச நோக்கர்கள் கொரிய தீபகற்பத்தில் முன்னதாகவே பதற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது வடகொரியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் என்றும் இதற்கு கடுமையான எதிர்வினையாற்றும் என்று கருதுகின்றனர்.