சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அதற்கு அடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்பாரா ? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றான ஆல்ரவுண்டரும் இல்லை. இதனால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
ஐபிஎல் 15வது சீசன் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இப்போதுதான் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதால் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தனது அடுத்த லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.