நடிகை பிரணிதா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்.
சூர்யா நடித்த “மாசு” கார்த்தி நடித்த “சகுனி” உட்பட பல்வேறு தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் அண்மையில் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஊரடங்கு காலக்காலத்தில் அவருடைய திருமணம் இருவீட்டாரில் மிகச்சிலர் மட்டுமே கலந்துகொண்டு நடைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகை பிரணிதா அவருடைய கணவரின் 34வது பிறந்தநாளில் கர்ப்பமாக உள்ளதை சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த பலர் பிரணிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரணிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடியில் தனது பேபி பம்ப்பை பார்த்தபடி இருக்கும் புகைப்படம் அதனுடன் கர்ப்பமான விஷயம் தெரிந்த பிறகு நீங்கள் செய்ய தொடங்கும் முதல் விஷயம் ஒவ்வொரு முறை கண்ணாடியை கடக்கும் போது உங்கள் வயிற்றை பார்ப்பது தான் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்து பலர் அடிக்கடி வயிற்றை பார்க்காதீர்கள் கண்ணு பட்டுவிடும் கவனமாக இருங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர். மேலும் சிலர் பிரணிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்