நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. அதில் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இதையடுத்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளும், அதன் பிரதிநிதிகள் ஆகிய நீங்களும் மக்களாட்சியின் மகத்துவமான நம்பிக்கை. நீங்கள் முறையாக செயல்பட்டால் மக்களாட்சியின் தத்துவம் மகத்தான வளர்ச்சி பெறும். எனவே இதை பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைக்க வேண்டும். நீங்கள் அனைவரும் மக்களோடு இருங்கள், மக்களுக்காக இருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Categories
“மக்களோடு இருங்கள்; மக்களுக்காக இருங்கள்”…. முதல்வர் ஸ்டாலின்…..!!!
