Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் மருத்துவமனையில் அனுமதி

நகைச்சுவை நடிகர் சுனில் வர்மா நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கில் வெளியான மரியாடா ராமண்ணா, ராங்காடு உள்ளிட்ட படங்களில் கதாநாயகன் அவதாரம் எடுத்தவர் நகைச்சுவை நடிகர் சுனில் வர்மா. பின் சில படங்களின் தோல்வி காரணமாக மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கே திரும்பினார்.

சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘அலா வைகுந்தபுரமுலோ’ படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதேபோல் ரவி தேஜா நடிப்பில் நாளை திரைக்கு வர உள்ள ’டிஸ்கோ ராஜா’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சுனில், தீடீர் மூச்சு திணறல் காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |