இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் பட அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் திரையுலகுக்கு வந்தார். ஆனால் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக மாரி செல்வராஜ் பணியாற்றினார். இவர் இயற்றிய பரியேறும் பெருமாள் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்திற்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் வேற லெவல் ஹிட்டடித்தது. இந்த திரைப்படம் கடந்த 1995-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் பட அனுபவம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் தான் சட்டப்படிப்பு படித்து வந்ததாகவும், பேருந்துக்காக 3 மணி நேரம் காத்து இருப்பேன் எனவும் கூறினார். நான் பேருந்து நிலையத்தில் நிற்கும் போது என்னுடன் படிக்கும் சக மாணவர்கள் கேலி செய்வார்கள்.
இதனால் நான் மிகுந்த மன வேதனை அடைந்திருக்கிறேன். இந்நிலையில் திடீரென எங்கள் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து ஒன்று கண்ணாடி உடைந்த நிலையில் நின்றது. அந்தப் பேருந்தில் ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகள் ஏறியது. இதை வன்முறை என்று சிலர் கூறினார்கள். இருப்பினும் இந்த சம்பவத்தை பார்த்த போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் ஒரு பேருந்து கூட நிற்காத எங்கள் ஊரில் கண்ணாடி உடைந்த நிலையில் நீண்ட நேரமாக இந்த பேருந்து நின்றது. அதன்பிறகு பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால் எங்கள் கிராமத்தில் படிக்கும் நிறைய பெண்கள் கல்லூரிக்கு வருவதில்லை. இதைவிட பெரிய கொடுமை திருநெல்வேலியிலிருந்து எங்கள் ஊருக்கு பேருந்து நிற்குமா என்று கேட்போம். ஆனால் ஒரு பேருந்து கூட எங்கள் ஊரில் நிற்காது. இருப்பினும் எங்கள் ஊரை தாண்டி தான் திருச்செந்தூர் பேருந்துகள் அனைத்தும் செல்லும். என்னுடைய ஊர் புளியங்குளம் ஆகும் என்றார். மேலும் என்னுடைய வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டே கர்ணன் படத்தை இயக்கினேன் என மாரி செல்வராஜ் கூறினார்.