டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் இளைஞர்களை கவரும் விதமாக பல்வேறு எலக்ட்ரிக் பைக்குகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இளைஞர்களை அதிகம் ஈர்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள க்ரட்டோஸ் எலக்ட்ரிக் பைக்குகளின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடப்பு ஆண்டிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ இந்த பைக் வெளியாக இருக்கிறது. இதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் விலை ரூ.1.07 லட்சம் இலிருந்து ரூ.1.22 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்ய பட்டுள்ளது.