ஓடும் பேருந்தில் கைப்பையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சகோதரியான தனலட்சுமி என்பவருடன் தனது அம்மாவைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி 10 பவுன் தங்க நகை, 2000 ரூபாய் பணம், ஏ.டி.எம் கார்டு போன்றவற்றை ஒரு பையில் வைத்து எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையத்தில் பேருந்தில் வந்துள்ளார்.
அப்போது தனது கைப்பை காணாமல் போனதை கண்டு ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஓடும் பேருந்தில் கைப்பையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.