ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் ரெட்ரயில் என்ற மொபைல் செயலியை red.bus அறிமுகம் செய்துள்ளது. பேருந்து பயணத்திற்கான பயணச்சீட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள ரெட்பஸ் தளம் பயன்பட்டு வருகிறது. இது அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவில் களமிறங்கியுள்ளது. 5 முதல் 6 மாநில மொழிகளில் ரெட்ரயில் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் ரெட் பஸ் தளம் தொடங்கப்பட்டது. இன்று சுமார் 2500 பேருந்து ஆபரேட்டர்களுடன் பயணிகளை இணைத்து பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
