ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவளர்ச்சிபட்டி கிராமத்தில் பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பன்னீருக்கு சொந்தமான பசுமாடு நேற்று காலை ஆறு கால்களுடன் ஒரு கன்றை ஈன்றது. இந்த அதிசய கன்று குட்டியை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதுகுறித்து பன்னீர் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கால்நடை மருத்துவர் கன்றுக்குட்டிக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளார்.