சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு பகுதியில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சனல் குமார் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் இருந்த ஒரு பள்ளி வளாகத்தின் முன்பு சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் நின்றுகொண்டிருந்தார். அந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அடைக்காகுழி பகுதியைச் சேர்ந்த அபிஜித் என்பதும், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்த வாலிபரை தனிப்படை காவல்துறையினர் கொல்லங்கோடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.