Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகைக்கடன் பயனாளிகளுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழக கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் 110 விதி கீழ் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி புள்ளிவிபரங்கள் பகுப்பாய்வு செய்ததில் அதிமுக ஆட்சியின் போது நகைக்கடன்கள் வழங்கப்பட்டதில் பல விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த திட்டத்தின்கீழ் தகுதியுள்ள பயனாளர்களை தேர்வுசெய்ய நிபந்தனைகளானது விதிக்கப்பட்டது. இதனால் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நகைக் கடன் வாங்கி இருப்பது, முன்னதாக பயிர்க்கடன் பெற்றவர்கள், வெவ்வேறு வங்கிகளில் 5 சவரனுக்கும் மேல் நகைக்கடன் பெற்றவர்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. நகைக் கடன் தள்ளுபடி அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதிவாய்ந்த பயனாளிக்கு மட்டுமே சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரிக்க சிறப்பு தணிக்கை நடந்தது. இந்த சிறப்பு தணிக்கையானது ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்ககளிலும் அயல் மாவட்ட தணிக்கையாளர்கள் வாயிலாக நடைபெற்றது.

அதன்படி பல மாவட்டங்களில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அடகு வைத்த நகைகளும், தள்ளுபடி சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் நாகைமாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்- 59, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள்-2, வேதாரண்யம் உப்பு உற்பத்தியாளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்- 1, வேதாரண்யம் வேளாண் உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்-1, வேதாரண்யம் ஊரக வளர்ச்சி வங்கி -1, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் -9 என மாவட்டத்திலுள்ள மொத்த 73 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்ற 18,412 நபர்களுக்கு கடன் தொகை ரூபாய் 5371.27 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |