மேய்ந்து கொண்டிருந்த மானை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செருபாலக்காடு பகுதியில் 2 வயதுடைய புள்ளி மான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த தெரு நாய்கள் மானை கடித்து குதறியுள்ளது . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக நாய்களை விரட்டி விட்டு மானை மீட்டு ஊராட்சி தலைவர் ருக்மணியிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து ருக்மணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மானுக்கு சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் வனத்துறையினர் அந்த மானை கோடியக்கரை காப்புகாட்டில் கொண்டு விட்டுள்ளனர்.