அமெரிக்காவில் நியூயார்க்கின் புரூக்ளினிலுள்ள ஒரு சுரங்கப்பாதை நிலையத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த திடீர் தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக நியூயார்க் நகர தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையில் சம்பவ இடத்தில் அங்கு பல வெடிக்கப்படாத சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று நியூயார்க் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவ்வாறு அதிகாரிகளின் கூற்றுப்படி தாக்குதல் நடத்திய நபர் Gas Mask மற்றும் ஒரு பெருநகர போக்குவரத்து ஆணைய ஊழியர் அணிவதைப் போன்ற ஆரஞ்சு நிற கட்டுமான அங்கியை அணிந்து இருந்ததாகவும், அவர் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன் சுரங்கரயில் நிலையத்தில் ஒரு சாதனத்தை வீசுவதைக் காணமுடிந்தது எனவும் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரியை காவல்துறையினர் தேடி வரும் சூழ்நிலையில், அப்பகுதியிலுள்ள பள்ளிகளில் தஞ்சம் அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவ இடத்தின் நிலவரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு விளக்கப்பட்டுள்ளது மற்றும் மூத்த ஊழியர்கள் நியூயார்க்கின் மேயர் எரிக் ஆடம்ஸுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.