வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியன் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டால் சேவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு இந்தியன் வங்கிக் கிளையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பிளாஸ்டிக் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிளாஸ்டிக் தடுப்புகளில் வாடிக்கையாளர் ஒருவர் முட்டி போட்டு வங்கி ஊழியரிடம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த செய்தி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொடர்புகொண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். மேலும் தடுப்பு நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் குப்பை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமாக இல்லாத விரிப்பை அகற்ற வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றன.
இதனை தவிர வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படாமல் சேவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முறையாக பராமரிக்காத காரணத்தால் நடவடிக்கைகளை சரி செய்து உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இன்று இந்த தகவலை இந்தியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.