Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முறையில் வரப்போகும் மாற்றங்கள்…. வெளியான முக்கிய தகவல்…..!!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுமுறை, பயிற்சி, பதவி உயர்வு என அனைத்தையும் மறு ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க விரைவில் குழு அமைக்க இருக்கிறோம் என்று நிதியமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்

காங்கிரஸ் – ராஜேஷ்குமார்: “அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி தொகுதி 2 தேர்வுக்கு 10.50 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதில் கன்னியாகுமரியில் மட்டும் 50 ஆயிரம் நபர்கள் விண்ணப்பித்து உள்ளனர். எனினும் போட்டித் தேர்வை எதிர்கொள்ள அரசு சார்பாக போதிய பயிற்சி மையம் இல்லை. ஆகவே கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் பயிற்சி மையம் அமைக்கப்படுமா…? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது அமைச்சர் தியாகராஜன் ” கடந்த 3 வருடங்களாக டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படவில்லை. அதற்கு முன்பு பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு முறைகேடு, விதிமீறல் என்று தீர்ப்பு வந்தது. ஆகவே தேர்வுமுறை பல வருடங்களாக ஆய்வு செய்யப்படாமல் உள்ளது. இப்போது 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் அரசில் இருக்கின்றன. அதில் சிலஇடங்களில் கூடுதல் நபர்கள், சில இடங்களில் யாருமே இல்லாத நிலை இருக்கிறது.

ஆகவே தேர்வு முறை, பயிற்சி, பதவி உயர்வு ஆகிய அனைத்தையும் மறு ஆய்வு மேற்கொள்ள ஒரு குழு அமைக்க இருக்கிறோம். அத்துடன் 6 மாதங்களுக்குள் பரிந்துரை அளிக்க கூறியுள்ளோம். அந்த குழுவின் பரிந்துரையை பெற்று முடிவு செய்வோம். அரசுக்கு நிதியைவிடவும் மனித வளம் முக்கியம் ஆகும். இந்த வருடம் நிபுணர் குழு அமைத்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அடிப்படை சீர்திருத்தம் கொண்டு வரப்படும். அரசு ஊழியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என அனைவரையும் சேர்த்து ஒரு முழுமையான அறிக்கையை 6 மாதத்தில் அளிக்கவுள்ளோம்” என்று விவாதம் நடைபெற்றது.

Categories

Tech |