Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” பொது மக்களின் போராட்டம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சண்டிவீரன்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடாபிஷேக விழா நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த அறநிலையதுறை அதிகாரிகள் கோவில் அறநிலையத்துறைக்கு   சொந்தம் எனக்கூறி விழா நடத்துவதற்கு தடை விதித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் அனைவரும் கோவிலை மீண்டும் கிராம மக்களிடம்   ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றனர். ஆனால் அங்கு சிலரை  மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, ஆத்மநாதன், தாசில்தார் தங்கமணி, காவல்துறையினர் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 162 பேரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |