தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.