Categories
இந்திய சினிமா சினிமா

சாலையில் சென்றோருக்கெல்லாம் ‘கட்டிப்பிடி’ வைத்தியம்: வைரலாகும் ரிச்சா சத்தாவின் வீடியோ!

நடிகை ரிச்சா சத்தா ‘NATIONAL HUG DAY’ நாளன்று, சாலையில் சென்றவர்களைக் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டார்.

ஆண்டு தோறும் ஜனவரி 23ஆம் தேதி, ‘HUG DAY’ கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் குழந்தைகள், பெரியவர்கள், நண்பர்கள் என்று அனைவரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்வார்கள். இது இந்தியாவில் பெரிதாகக் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும், வெளிநாடுகளில் பலரும் இதனைக் கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ‘NATIONAL HUG DAY’ வழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா, ‘ NATIONAL HUG DAY’ கொண்டாடியுள்ளார். கையில் ‘FREE HUG’ என்ற போர்டு வைத்துக்கொண்டு வீதியில் வரும், ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என்று அனைவரையும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பறிமாறிக் கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட விடியோவை நடிகை ரிச்சா சத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

https://www.instagram.com/tv/B7lmuXpjzMI/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |