Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆதி என்னை மிகவும் நேசிக்கிறார்”… “நான் நடிப்பதற்கு தடை போட மாட்டார்”… பேட்டியில் கூறிய நிக்கி…!!!

ஆதி என்னை மிகவும் நேசிப்பதாகவும் திருமணத்திற்குப் பிறகும் நான் நடிப்பதற்கு தடை போட மாட்டார் என பேட்டியில் நிக்கி கல்ராணி கூறியுள்ளார்.

2014ஆம் வருடம் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் தந்தார் நிக்கி கல்ராணி. இவர்  ஜீவா, விஷ்ணு விஷால், ஜிவி பிரகாஷ், ஆதி போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நிக்கி கல்ராணி யாகவராயினும் நாகாக்க, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகதநாணயம், ஹர ஹர மஹாதேவகி, ராஜவம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். யாகவராயினும் நாகாக்க திரைப்படத்தில் ஆதியுடன் இணைந்து நடித்த போது நிக்கிக்கும் ஆதிக்கும் காதல் மலர்ந்துள்ளது.

ஆனால் இதை பற்றி இவர்கள் வெளியே கூறவில்லை. இந்நிலையில் அண்மையில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நிக்கி கல்ராணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, ஆதி என்னை மிகவும் நேசிக்கிறார். திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அந்த ஆசைக்கு அவர் நிச்சயம் தடை போட மாட்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என கூறியிருக்கிறார். மேலும் அவர் வெப்சீரிஸ் ஒன்றை தயாரிக்க இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியிருக்கிறார். நிக்கி கல்ராணி சிவுடு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் ஆதி கிளாப் மற்றும் தி வாரியர் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதனால் இவர்கள் இருவரும் இந்த திரைப்படங்களை முடித்த பிறகே திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |