Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மூன்று ஆண்களுக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்திய ஆண்ட்ரியா”… இயக்குனர் மிஷ்கின் புகழாரம்…!!!

ஆண்ட்ரியாவின் நடிப்பை பார்த்து இயக்குனர் மிஷ்கின் புகழ்ந்துள்ளார்.

பிரபல இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிசாசு2 திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்க விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதீப் மற்றும் அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஆண்ட்ரியா பாடகியாக வலம் வந்த நிலையில் தற்போது தனது நடிப்பின் மூலம் சிறந்த கதாநாயகியாகவும் வலம் வருகின்றார்.

மிஸ்கின் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இத்திரைப்படமானது ஹாரர் பின்னணியில் உருவாகி வருகின்றது. இந்நிலையில் மிஸ்கின் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நடிப்பை பற்றி கூறியதாவது, ஆண்ட்ரியா படத்தில் மூன்று ஆண்களுக்கு நிகரான பலத்தோடு நடித்திருப்பதாகவும் அவர் நடிப்பைப் பார்த்து நானே மிரண்டு விட்டதாகவும் அண்மையில் நடந்த டப்பிங் வேலைகளை முடித்ததும் என்னை ஆச்சரியப்படுத்தி உள்ளதாகவும் விரைவில் திரையுலகையே ஆச்சர்யபடுத்துவார் என அவரின் நடிப்பைப்பார்த்து மிஷ்கின் புகழ்ந்துள்ளார்.

Categories

Tech |