Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஐஸ்வர்யா பகிர்ந்த இன்ஸ்டா பதிவு… “அவரையும் நீங்க விட்டு வைக்கலையா”… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!!

ஐஸ்வர்யா பகிர்ந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் சென்ற ஜனவரி மாதம் இருவரும் பிரிந்தார்கள். பிரிவுக்குப் பின் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். முசாபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டிருக்கின்றார். இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த பதிவுகளானது வைரலானதை தொடர்ந்து அடுத்ததாக ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து துர்கா படத்தை பண்ண இருப்பதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து ஐஸ்வர்யா இரண்டு திரைப்படங்களையும் இயக்க உள்ளார். ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டும் வரும் நிலையில் தனது புகைப்படங்கள், தான் செய்யும் விஷயங்களை என பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று பகல் இசைஞானி இளையராஜாவை சந்தித்து உள்ளார் ஐஸ்வர்யா. இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் அவரையும் விட்டு வைக்கலையா என கலாய்த்து வருகின்றனர். சிலரோ அடுத்த படத்திற்கு சாமி தான் இசையமைக்கப் போகிறாரா என்றும் இன்னும் சிலரோ நீங்கள் அதிர்ஷ்டசாலி இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறீர்கள் எனவும் கூறி வருகின்றனர்

Categories

Tech |