Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பரபரப்பு…. கோவிலுக்குள் செல்ல இலவச டோக்கன்…. பக்தர்களுக்கு மூச்சுத் திணறல்…!!!!!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல தரிசன டோக்கன் பெற வந்த பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலுக்குள் செல்வதற்கு இலவச டோக்கன் பெற வந்த  பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருந்த நிலையில் பத்துக்கும் அதிகமானோருக்கு சிறிய காயங்களுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் மூன்று இடங்களில் இலவச தொடர்ந்து வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக இலவசக் வழங்கப்படாத நிலையில் இன்று  இலவச டிக்கெட்களை  பெற அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் டிக்கெட்  வாங்கும் இடத்தில் கூடியுள்ளனர்.

இதில் பலர் முண்டியடித்துக்கொண்டு இலவச டோக்கன் பெற முயற்சி செய்துள்ளனர். இதனால் குழந்தைகளுடன் வந்தவர்கள் மற்றும் வயதானவர்கள் ஒரு சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து தேவஸ்தான ஊழியர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |