Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்கள்….வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில் ஊழியர் காலிப்பணியிடங்களை  நிரப்பும் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி ,சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பொருட்களை மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் இந்த ரேஷன் கார்டு முக்கியமாக எடுத்துக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அரசு. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது. அதன்படி இத்திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்முறை படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 69 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இதற்கு முன் கடந்த 2012 ஆகஸ்ட் 25 இல் கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் 2020ம் ஆண்டு, ஜூன் 10ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக, விற்பனையாளர் மற்றும் கட்டுனர் காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆகிய அறிவிப்பும் ரத்து செய்யப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், கூட்டுறவு நிறுவனம் நடத்தும் ரேஷன் கடைகளில், 2020ம் ஆண்டு, ஏப்., 1ம் தேதி, காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

மேலும் காலியாக இருந்த, 79 விற்பனையாளர், 20 கட்டுநர் பணியிடங்களுக்கு, விண்ணப்பம் பெறப்பட்டு, அதே ஆண்டு டிச., 7 – 24ம் தேதி வரை, நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில் ஊழியர் காலிப்பணியிடங்களை  நிரப்பும் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை, திருவள்ளூர் மாவட்ட இணை பதிவாளர் மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார் .

Categories

Tech |