அதிக புகையை வெளியேற்றிய ஆட்டோவின் ஓட்டுநருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கடன் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று கடுமையான புகையைக் கக்கியபடி வந்தது. அதனை பார்த்து காரைவிட்டு இறங்கிய அமைச்சர் வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்தார்.
சர்வீஸ் செய்து ஆட்டோவை தற்போதுதான் எடுத்து வருவதாகவும், புகைக்கான காரணம் தெரியவில்லை எனவும் ஆட்டோ ஓட்டுநர் அமைச்சரிடம் விளக்கமளித்தார்.
சூழலை மாசு படுத்தும் வகையில் அதிக புகையை வெளியேற்றும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்டோ ஓட்டுனரை எச்சரித்து அமைச்சர் அனுப்பி வைத்தார்.