இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு மூன்றாம் வீதியில் வீர பாண்டியன் (32) என்பவர் வசித்து வந்தார். இவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். வீரபாண்டியனின் தற்கொலைக்கு என்ன காரணமாக இருக்கும் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.