Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவி தற்கொலை… குறும்படத்துடன் தொடர்பா?… மறுக்கும் பெற்றோர்…. விசாரணையில் போலீசார்..!!

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், இந்திரா வீதியில் வசித்து வருபவர் மாறன். இவருடைய மகள் 16 வயதுடைய துர்காதேவி. இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் தேதி மாலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து மாறன் விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் தனது மகள் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையில் மாணவி குறும்படம் ஒன்றில் நடித்ததாக சொல்லப்படுகிறது. அந்தப் படம் வெளியான அதே நாளில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் குறும்படத்திற்கும், தற்கொலைக்கும் தொடர்பு இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் வைரலாக தகவல் பரவி வருகிறது. ஆனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது  என்று அவரது பெற்றோர்கள், உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாணவியின் இறப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |