குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்துள்ள மாதா கோயில் நிறுவன தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 85 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா நெருக்கடி முடிந்துவிட்டது என்று நாங்கள் அறிவிக்கவில்லை. இந்தியாவை விட்டு கொரோனா முற்றிலும் நீங்கவில்லை. மீண்டும் வடிவங்களை மாற்றிக் கொண்டு பரவுகிறது. எனவே மக்கள் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறைத்து கொள்ள வேண்டாம்.
ஏற்கனவே கடந்த மாத இறுதியில் மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமலில் இருந்த நடவடிக்கைகள் அனைத்தும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி, கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது என்று நாங்கள் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த எச்சரிக்கையால் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ ? என்ற அச்சம் எழுந்துள்ளது.