Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்க இருந்து கடத்திட்டு வரீங்க….. போலீசார் திடீர் வாகன சோதனை…. டிரைவரிடம் தீவிர விசாரணை….!!

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் கடத்தி வரப்பட்ட 1,350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வருவது அதிகரித்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்று நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பாச்சல் பிரிவு சாலையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், நாமக்கல் தனித்துணை தாசில்தார் ஆனந்தன், தனி வருவாய் ஆய்வாளர் சியாம் சுந்தர் மற்றும் காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஆம்னி வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் சுமார் 1,350 கிலோ ரேஷன் அரிசி பிளாஸ்டிக் சாக்குகளில் வைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆம்னி வேனுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அதனை கடத்தி வந்த சேந்தமங்கலத்தை சேர்ந்த ஜெகநாதன்(52) என்பவரை குற்றபுலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து எங்கிருந்து அரிசி கடத்தி வரப்பட்டது என்ற விவரங்களை விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |