நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுவது மிகக் குறைவான வயது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டு காலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதிபதி என். வி. ரமணா. இவர் வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். தற்போது இவருடைய 65 வயதில் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 65 வயதில் நீதிபதிகள் ஓய்வு பெறுவது தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “அமெரிக்க நாட்டின் நீதிபதியாக இருப்பவர் அந்நாட்டு அரசியல் சாசனப்படி உயிரோடு இருக்கும் வரை பதவியில் இருந்து கொள்ளலாம். ஆனால் நம் நாட்டில் மட்டும் 65 வயதில் ஓய்வு பெறுவது என்பது மிகக் குறைவான வயது” என்று அவர் தெரிவித்துள்ளார்.