ஜூராசிக் வேர்ல்ட் டோமினியன் படம் வரும் ஜூன் 10ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. ஜூராசிக் பார்க் படங்களின் வரிசையில் கடைசியாக ஜூராசிக் வேர்ல்ட் ஃபெலன் கிங்டம் படம் 2018ம் ஆண்டு திரைக்கு வந்தது. இதனையடுத்து இந்த படத்தின் அடுத்த பாகமாக ஜூராசிக் வேர்ல்ட் டோமினியன் உருவாகியது. தற்போது இந்த படத்தை காலின் டிரெவொரவ் இயக்கியிருக்கிறார் . இதில் கிரிஸ் பராட், பிரய்ஸ் டல்லாஸ் ஹோவர்ட், லவ்ரா டெர்ன், சாம் நீல் போன்ற பலர் நடித்துள்ளனர். ஜூராசிக் பார்க் படங்களிலேயே நீளமான படமாக இது 2 மணி நேரம் 26 நிமிடம் ஓடும் வகையில் தயாராகியிருக்கிறது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் இந்த படம் உருவாக உள்ளது.
Categories
4ஆண்டுகள் கழித்து மீண்டும்…..ஏப்ரல் 10-ஆம் தேதி முதல்…திரைக்கு வருகிறது….!!!!!!
