ஒமிக்ரான் வைரஸால் தூண்டப்பட்ட கொரோனா தென்கொரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தினமும் கிட்டதட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது இந்த நிலை மாறி வருகிறது. அதாவது தென்கொரியாவில் கடந்த 9ஆம் தேதி அன்று 1 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 481ஆக சரிந்தது.
தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சத்து 33 ஆயிரத்து 670 ஆகும். நேற்று முன்தினம் இந்த தொற்றினால் 329 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 19 ஆயிரத்து 421ஆக அதிகரித்துள்ளது. தென்கொரியாவில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.