கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய போப் பிரான்சிஸ், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஏதுவாக ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனும், ரஷ்யாவும் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் நாடுகளின் தலைவர்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சில தியாகங்களை செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் போப் பிரான்சிஸ் தன்னுடைய உரையில் உக்ரைன், ரஷ்யா நாடுகளின் பெயர்களை நேரடியாக குறிப்பிடாமல் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.