தனது கல்லூரி காதல் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை சாக்ஷி அகர்வால்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்-க்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. பங்கேற்பாளராக சாக்ஷி அகர்வால் இருந்தது மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அவர் கல்லூரியில் படிக்கும் பொழுது ஒருவரை உருகி உருகி காதலித்ததாக கூறி இருக்கின்றார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ஆர்யாவுடன் இணைந்து டெடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியுள்ளதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ கோல்ட் மெடல் மாணவி நான். நான் எம்.என்.சி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை செய்துகொண்டிருந்தேன். ஆனால் வாழ்க்கையில் ஏதோ குறைவது போல் இருப்பதால் விளம்பரத்திற்கு மாடலாக நடித்து சென்றது. அது எனக்கு செட் ஆகி விட்டது. அதனால் சினிமாவில் நடிக்க வந்தேன். தொடர்ந்து பேசிய சாக்ஷி அகர்வால் கல்லூரி படிக்கும் போது தனக்கு ஏற்பட்ட காதல் பற்றி கூறியதாவது அவர் கல்லூரி படிக்கும் போது ஒருவரை உருகி உருகி காதலித்தாராம்.
அந்த காதல் அழகானதும் உண்மையானதுமாம். நான் காதலித்த நபர் மிகவும் ரசிக்கக் கூடியவர். நாங்கள் படித்த கல்லூரியில் கண்டிப்பு அதிகமாக இருப்பதால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாது. இதனால் கண்களாலேயே எங்கள் காதல் வளர்ந்தது. காதலனை பார்ப்பதப்பதற்காக காத்திருப்பது அவரின் குரலுக்காக ஏங்குவது என இருந்து. அது இப்போது இருக்கும் இளம் காதலர்களுக்கு இல்லை என கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் யார் அந்த காதலன் எனவும் இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு எனவும் கமெண்ட்களில் பதிவு செய்து வருகின்றனர்.