2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட எஸ்யூவி ரக கார்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் டாப் 10 இடங்களில் ஏழு இடத்தை மாருதி சுசுகி யின் சூப்பர் மாடல்கள் ஆக்கிரமித்துள்ளது. எப்பொழுதுமே முதல் 5 இடங்களில் மாருதி சுசுகி இருக்கும். ஆனால் இம்முறை டாடா நெக்ஸான் பெரிய அளவில் ஏற்றம் கண்டு உள்ளதால் முதல் மூன்று இடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக மாருதி சுசுகியின் இடம் உள்ளது. கடந்த மாதத்தில் இருப்பதிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மாருதியின் ஹேட்ச்பேக் கார் உள்ளது.
மாருதி சுசுகியின் ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் 26.634 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு முதலிடம் பிடித்துள்ளது. மாருதி சுசுகி டிசையர் 18.623 யூனிட்டுகள், பலேனோ 16.520 யூனிட்டுகள் விற்கப்பட்டுள்ளன. அடுத்ததாக டாடா நெக்ஸான் 16. 315 யூனிட்டுகள், சுசுகி ஸ்விப்ட் 13.623 யூனிட்டுகள், வீட்டாரோ பிரெஷா 12.433 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.