மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி வேல்முருகன் காலனியில் ஆவுடையம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டியை பார்ப்பதற்காக அவரது பேரன் செல்லபாண்டி என்பவர் சென்றுள்ளார். அப்போது மூதாட்டி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து செல்லப்பாண்டி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.