சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டு மாரியம்மன் கோவில் அருகே ஒருவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சுரேஷை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 2 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.