Categories
தேசிய செய்திகள்

வேலை தேடும் பெண்களை ஏமாற்றி…. பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்…. பிளான் போட்டு தூக்கிய போலீஸ்….!!!!

வேலை தேடும் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் இளம் பெண்களிடம் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். சங்கர் ஜிவால் உத்தரவின்படி தனிப்படை அமைத்து ரகசியமாக கண்காணிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று கோயம்பேடு சின்மயா நகர் பகுதியில் தனியார் விடுதியில் வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய இளைஞர்கள் 7 பேரை கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஐந்து பெண்களும் மீட்கப்பட்டு அருகில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஏழு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |