அமெரிக்காவிற்கு சென்ற பாதுகாப்பு மந்திரியான ராஜ்நாத்சிங், மேக் இன் இந்தியா திட்டத்தில் சேர அமெரிக்க விண்வெளி நிறுவன தலைவரை அழைத்திருக்கிறார்.
இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பான 2+2 ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்புத்துறை மந்திரியான ராஜ்நாத்சிங் இதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்.
வாஷிங்டனில் போயிங், ரேதியோன் ஆகிய விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அவர்களிடம் மேக் இன் இந்தியா, மேக் இன் உலகம் திட்டங்கள் தொடர்பில் விளக்கியுள்ளார். மேலும், இந்தியாவுடன் அமெரிக்கா சேர வேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார்.