Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் சித்திரை திருவிழா…. தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்….!!!

பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலையில் பிரசித்தி பெற்ற சுவாமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியசாமிக்கு  இடும்பன் வாகனத்தில் வீதி உலா, ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி மயில், ஏனைய பரிவார வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நாளாக வருகின்ற 18-ம் தேதி சித்திரை நீரோட்டமும், 19-ஆம்  தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்  உதவி ஆணையர் ஜீவானந்தம், சுவாமிமலை சாலியர் பொது  மேனேஜிங் டிரஸ்டி செந்தில்வேல், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர்  செய்கின்றனர்.

Categories

Tech |