தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடக்கழகம் சார்பில் மேலும் ஒரு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சைக் குரிய கருத்தை வெளியிட்டார். இதனால் ரஜினிகாந்த் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது.
இந்தநிலையில் பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதோடு பொதுமக்களை குலைக்கும் வகையில் பொய்யான தகவலை பரப்பிய ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி திராவிட விடுதலைக் கழக கோவை மாவட்டத்தின் தலைவர் நீருதாஸ் கோவை காட்டூர் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரஉள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தொடர்ந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.